Wednesday, 16 July 2008

ஆப்பிள் ஜாம்

--
ஆப்பிள் 2
சர்க்கரை 1-கப்
தண்ணீர்-அரை கப்
டோனோவின் எசென்ஸ் 1/4 டீஸ்பூன்
--------------
அடி கனமான பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும் .
ஒரு இன்ச் கனத்தில் வெட்டப்பட்ட ஆப்பிள் துண்டுகளை, அதோடு சேர்த்து வேகவிடவும்.
5 நிமிடங்களில் ஆப்பிள் வெந்து விடும் .வெந்த பழத் துண்டுகளை, அஞ்சலி பழகூழ் பிரித்தெடுக்கும் வடிகட்டியில் போட்டு சுழற்றுங்கள்.
விதையும் தோலும் நின்றுவிட, கூழ் மட்டும் வடிகட்டப்பட்டு பாத்திரத்தில் சேரும் .
அதோடு சர்க்கரையைக் கலந்து கொதிக்க விடுங்கள்.
ஜாம் பதம் வந்ததும் டோனொவின் எசென்ஸ் சேர்த்து ஆற வைக்கவும் .
ஆறிய பின் பாட்டிலில் அடைக்கவும்.
வீட்டிலேயே அருமையான ஆப்பிள் ஜாம் தயார்.
-----------------

No comments: