கொத்தமல்லி சட்னி
--------------------
ரொம்ப சிம்பிள்
===============
ஒரு கட்டு கொத்தமல்லி...
ஒரு தக்காளி
ஒருவெங்காயம்
5-8சிகப்பு மிளகாய்
3-பல் பூண்டு
1- வெங்காயம்
கறிவேப்பிலை-2 உருவல்[ஆங்கிலத்தில் 2 ஸ்பிரிங் என்று அர்த்தம்]
கடுகு உளுந்தம்பருப்பு-இரண்டிலும் ஒரு டீஸ்பூன்
கடலைப் பருப்பு -ஒரு டீ.ஸ்
பெருங்காயப் பொடி 1/2 டீஸ்பூன்
எண்ணை -2 டேபிள்ஸ்பூன்
கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைக்கவும்
எண்ணையை ஊற்றி காய்ந்ததும்,கடுகு உளுந்து,கடலைப் பருப்பு,ஆகியவைகளைத் தாளிக்கவும்.பிறகு மிளகாய் வத்தலைப் போடவும்,பெருங்காயப் பொடி சேர்த்து மணம் வந்ததும்,நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பூண்டு புளி அனைத்தயும் சேர்த்து வதக்கவும்,கடைசியாக,அலசி காயவைத்த கொத்தமல்லித் தழையை போட்டு ஒரு முறை கிண்டி விட்டு,ஒரு பெரிய தட்டில் அவைகளைப் பரத்தி ஆற வைக்கவும் [.சூட்டோடு மிக்ஸியில் போட்டு அரைத்தால் மூடி எகிறும் என்று சொல்லாமலேயே தெரியும்]
நன்றாக ஆறியதும் தேவையான உப்பு கலந்து ,மிக்ஸியில் சிறுது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்[அம்மியில் அரைத்தால் சுவை கூடும்]
அன்றே காலியாகுமென்றால் மறுபடியும் வதக்க வேண்டாம்.
அப்படியே சாப்பிடலாம்.
3டீஸ்பூன் எண்ணையை சூடாக்கி அதில் சட்னியை வதக்கி எடுத்து வைத்தால் இரண்டு நால் கெடாமல் இருக்கும்.
இட்லி தோசை,சப்பாத்தி பிரட் சாண்ட்விச் என்று சகலத்துக்கும் பொருத்தமான ஜோடி
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
தனியாக கொத்தமல்லி சட்னி செய்வதுண்டு. தக்காளி, வெங்காயம் சேர்த்து...செய்து பார்க்கிறேன் கண்டிப்பாக.
ramalakshmi
try this recipe .you will like it .a slight change will make a vast difference...like a small stroke of colour brings beauty in a painting.
கொத்தமல்லி சட்னி எப்படிச் செய்வது என்று தேடியபோது உங்கள் செய்முறை அகப்பட்டது. செய்து பார்க்கிறேன். நன்றி!
Post a Comment