அயல் நாட்டில் வாழும் நம் ஊர்க்காரருக்கு
துரித சமையல் ஒன்றிரண்டு.
எப்பொழுதும் ஃபிரசரில் ஃபிங்கர் ஃபிரைஸ்,பட்டாணி இரண்டுமே வைத்திருப்போம்.அவசரமாக ஒரு பொரியல் செய்ய ...கடாயை சூடாக்கி இரண்டு கரண்டி எண்ணை ஊற்றி காய்ந்ததும்,கடுகு சீரகம் தாளித்து நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்குங்கள்..200கிராம் உருளை ,100 கிராம் பட்டாணியைப் போட்டு வதக்குங்கள்....காரத்துக்கு கரம் மசாலா பெளடர்,மஞ்சள் தூள் ருசிக்கு உப்பு சேர்த்து வதக்கியபின் இரண்டு ஸ்லைஸ் தக்காளியைச் சேர்த்து ஒரு ட்விஸ்ட்....கொத்தமல்லி தழையைத் தூவி இறக்கி அழகாக பிளேட்டில் தட்டினால் துரித பொரியல் சாப்பிடத் தயார்.
Monday, 4 August 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment