1.சமையலில் தேங்காய் குறைக நினைப்பவர்கள்,கிரேவி ,தக்காளி கிச்சடி,போன்றவைகளுக்கு தேங்காய் பாலுக்குப் பதிலாக அல்லது அரைத்து சேர்ப்பதற்குப் பதிலாக பதார்த்தத்தின் அளவைப் பொறுத்து ஆவின் பால் அரை கப் அல்லது ஒரு கப் கலந்தால் சுவை சரியாக இருக்கும்.
2.பொரியலில் தேங்காய் துருவலுக்குப் பதிலாக வெள்ளை பிரட் க்ரம்ஸ் சேர்த்து கிண்டி விடுங்கள்.
3.பஜ்ஜி மாவு கரைக்கும் பொழுது,அடிபாகம் உருண்டையான பாத்திரத்தில் கரைத்தால்,மாவின் கடைசி ஸ்பூன் வரை,மாவு வீணாகாமல், உருளை வாழைக்காய் ஸ்லைஸ்களைத் தோய்த்து எடுக்கலாம்.
4.மறுநாள் காலை விருந்தினர் வருவது இரவுதான் தெரிய வந்தால் திணறி விடவேண்டாம்.அரிசி உளுந்து ஊரப் போட்டு ஆட்டி முடித்தபின் உப்பு சேர்த்து கலக்கும் பொழுதுபழைய இட்லி மாவைக் கொஞ்சம் கலந்து விடுங்கள்.காலையில் மாவு தயார்
Monday, 4 August 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment