டையமண்ட் பிஸ்கட் my recipe
-----------------
மைதா-1-கப்
சர்க்கரை பெளடர்-2- கப்
பொரிக்கத் தேவையான எண்ணை
உப்பு -கால் டீஸ்பூன்
மைதா மாவு பிசைய, அளவான தண்ணீர்.
------
மைதா மாவுடன் சிட்டிகை உப்பு சேர்த்து சிறுது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும் சப்பாத்தி மாவுபோல் இருக்க வேண்டும்
எண்ணையைக் கடாயில் ஊற்றி மிதமான சூட்டில் வைக்கவும் .
பொடித்த சர்க்கரையை அகலமான தட்டில் பரத்தித் தயாராக வைத்துக் கொள்ளவும்
அகலமான சப்பாத்திக் கல்லில் மைதா மாவை பெரிய சைசில் பூரிகளாக இட்டவும்
மைதா மாவை மேலே தூவி,டையமண்ட் கட்டர் கொண்ண்டு பூரியைத் துண்டு போடவும்.
காய்ந்த எண்ணையை சிறிது காஸ் அளவைக் கூட்டிய பின் டையமண்ட் துண்டுகளை மெதுவாக எண்ணையில் போட்டு மொறு மொறுப்பாகப் பொரித்து எடுக்கவும் .
பொரித்து எடுத்த டையமண்ட் வில்லைகளை சூடு ஆறுமுன் சர்க்கரை பொடியில் போட்டு ,வில்லைகளில் சர்க்கரைப் பூச்சு பரவும் படி பிசறி விடுங்கள்.காற்று புகாத டப்பாக்களில் அடைக்கும் முன் செய்த பண்டங்கள் மிதமான அறையின் சூட்டுக்கு வருவது அவசியம்.
செய்து பார்த்து சொல்லுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
டையமண்ட் பிஸ்கட் ஜொலிக்குதே!
நிச்சயமா நல்லாருக்கும்! நட்டி!!!ஆர் நாட்டி?
வசிஷ்டர் கையால் குட்டு, அல்லது ஷொட்டு, அதுவும் மோதிரக் கையால், அதுவும் வைர மோதிரக் கையால் ,வாங்கி விட்டேன். நன்றி !நானானி...
அழைப்பு விடுத்த உடன் வந்து வாழ்த்தியதற்கு.
Post a Comment